பேட்டரி திருட்டு போவதால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை776366588
பேட்டரி திருட்டு போவதால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை
உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் பேட்டரி திருட்டு போவதால், மின்தடை நேரத்தில் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இத்தகைய சூழ்நிலையில், ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், பெண் நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பதும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். அந்தப் ெபண்ணுக்கு ஸ்டெதாஸ்கோப் மூலம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, அருகில் இருந்த மற்றொருவர் டார்ச் லைட் ஒளியைக் காட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பலியா மாவட்ட மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், ‘சுமார் 20 நிமிடங்களுக்கு பின் மின் விநியோகம் இருந்தது.
ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. ஆனால் அதனுடைய பேட்டரி உரிய நேரத்தில் செயல்படவில்லை. பேட்டரியை சிலர் திருடிச் செல்வதால், அதனை மறைத்து வைத்து பொருத்த வேண்டியுள்ளது. அதனால் சிறிது நேரம் மின்விநியோக பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது’ என்றார்.
Comments
Post a Comment