‘விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும்’ – புதிய தகவலால் கமல் ரசிகர்கள் உற்சாகம்1879865122
‘விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும்’ – புதிய தகவலால் கமல் ரசிகர்கள் உற்சாகம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். கமல் 2 வேடங்களில் நடித்து 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. வழக்கம்போல இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் உருவாக்கியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. க்ளைமேக்ஸில் அப்பா கமல் சேனாபதி தப்பிச் சென்று, வெளிநாட்டில் இருந்து போன் பேசுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு லைகா தயாரிப்பில், கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக இசையமைப்பதற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்னை, கிரேன் விபத்தில் 3 பேர் பலியானது, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த...