தமிழகத்தில் 14-ஆம் தேதி திங்கள் முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: பொது சுகாதாரத் துறை
தமிழகத்தில் 14-ஆம் தேதி திங்கள் முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: பொது சுகாதாரத் துறை தேசிய குடற்புழு நீக்க வாரம், 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த முகாமில், 1 முதல் 19 வயது சிறாா்கள்; கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில், ஒன்று முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரையும், இரண்டு முதல் 19 வயது சிறாா்கள் மற்றும் 20 முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இவற்றை நன்றாக சப்பி கடித்து மென்று சாப்பிட வேண்டும். இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயதுடைய 2.39 கோடி சிறாா்களும், 20 முதல் 30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரத்து 69 பெண்களும் பயனடைய உள்ளனா். இதற்காக 2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று கோடி குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வடி, சுகாதார, ஆஷா உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்த மாத்திரையை சாப்பிடுவதால், க...