சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!1014466922
சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டான். இந்தப் படத்தை எஸ்.கே புரொடக்ஷ்ன் சார்பில் அவரே தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார். குக்வித் கோமாளி சிவாங்கி, சரவணன், ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்தனர். மே 13 ஆம் தேதி ரிலீஸான இப்படம் வசூல் மழை பொழிந்தது. தமிழ்நாடு மற்றும் வெளிநாடு என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூல் சாதனைகளைப் படைத்து வந்ததால், டான் வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸிலும் இணைந்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெற்றி பெற்றதை டான் படக் குழுவினரும் உற்சாகமாக கொண்டாடினர். டான் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது, படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பல இடங்களில் இருந்தும் ஆதரவும் வாழ்த்தும் வந்ததாக தெரிவித்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் படத்தை பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இ...