நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு இம்ரான் கானுக்கு ‘3 சாய்ஸ்’ பாகிஸ்தான் ராணுவம் அதிரடி!
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு இம்ரான் கானுக்கு ‘3 சாய்ஸ்’ பாகிஸ்தான் ராணுவம் அதிரடி! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், தன்னிடம் மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான் கான் அரசு கவிழும்.இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் எம்கியூஎம். கட்சி ஏற்கனவே விலக்கிக் கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்து விட்டது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால், இம்ரான் கான் வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகி விடுவார் என கருதப்பட்ட நிலையில், ‘கடைசி ப