காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை! தன்னைக் காதலிக்க மறுத்து விட்டு, வேறு ஒரு நபருடன் நட்பாக பழகி வந்ததால், ஆத்திரமடைந்த காதலன், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, சுத்தியலால் தலையிலடித்து, அவரை 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் விஷ்ணுபிரியாவின் வீட்டில் இருந்து முகமுடி அணிந்த ஒரு நபர் வெளியே சென்றதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி விஷ்ணுபிரியாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சியாம்ஜித் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. பட்டதாரியான சியாம்ஜித் தனது தந்தை நடத்தி வரும் ஓட்டலில் அவருக்கு துணையாக இருந்து வந்தார். இவர் விஷ்ணுபிரியாவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் விஷ்ணுபிரியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் சியாம்ஜ...