கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை கடிதத்தில் பேராசிரியர் மீது பகீர் புகார்
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை கடிதத்தில் பேராசிரியர் மீது பகீர் புகார் தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேலரதவீதியை சேர்ந்தவர் கணேசன் மகள் இந்து பிரியா(18). புளியங்குடியில் உள்ள மனோ உறுப்பு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்போன் ெகாண்டு செல்லாத நிலையில், செல்போன் கொண்டு சென்றதாக கூறி மாணவிக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் பெண் உள்பட 2 பேர் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் மன்னிப்பு கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பலர் முன்னிலையில் மாணவியை ‘மேனர்ஸ் இல்லாத பெண்’ என பேராசிரியையும், பேராசிரியரும் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி இந்து பிரியா, இன்று (சனி) காலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புளியங்குடி போலீசார், சம்பவ இடம் சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி வீட்டில் நடத்திய ேசாதனையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மாணவி எழுதியிருப்பதாவது: ‘‘நான் தற்கொலை செய்வதற்கு பி.காம் துற...