Posts

Showing posts with the label #Chennai #ArchaeologicalSurvey #Anniversary #AmritaFestival

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம்

Image
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஆண்டு விழாவை கொண்டாடிய இந்திய தொல்லியல் அமைப்பின் சென்னை வட்டம் மார்ச் 12, 2021 அன்று தொடங்கப்பட்ட விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் சாதனைகளை கொண்டாடுவதற்கும் நினைவுகூர்வதற்குமான இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.  மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை ஒளிரச் செய்வது, புகைப்படக் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ஆண்டு முழுவதும் நடத்தியது.  சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய ஆவணப்படங்களைப்  பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில்  திரையிடுதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின்  நினைவைப்  போற்றுதல் மற்றும் கவுரவித்தல் போன்றவை பொது மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டன.  விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஓராண்டு பயணத்தை நிறைவு செய்யும் வகையில், “சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு” என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவை 12 மார்ச் 2022 அன்று சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டம்