சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!1014466922


சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டான். இந்தப் படத்தை எஸ்.கே புரொடக்ஷ்ன் சார்பில் அவரே தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கினார். குக்வித் கோமாளி சிவாங்கி, சரவணன், ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்தனர். மே 13 ஆம் தேதி ரிலீஸான இப்படம் வசூல் மழை பொழிந்தது.

தமிழ்நாடு மற்றும் வெளிநாடு என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூல் சாதனைகளைப் படைத்து வந்ததால், டான் வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸிலும் இணைந்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெற்றி பெற்றதை டான் படக் குழுவினரும் உற்சாகமாக கொண்டாடினர். டான் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது, படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பல இடங்களில் இருந்தும் ஆதரவும் வாழ்த்தும் வந்ததாக தெரிவித்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் படத்தை பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன், ரஜினிகாந்திடம் டான்  வெற்றிக்கு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். மேலும், அவருடன் ஒருமணி நேரம் உரையாடியதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், இந்திய சினிமாவின் டான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தாக கூறியுள்ளார். சுமார் ஒருமணி நேரம் அவருடன் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவுகளாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பொன்னான நேரத்தை ஒதுக்கி தன்னை வாழ்த்தியதற்கு நன்றி தலைவா என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Chicken Enchilada Skillet

Cherry Almond Biscotti