நேற்று தான் முதலிடத்தில் உள்ளது என்ற போது இன்று முதல் கார்களின் விலை உயர்வு…!!!


நேற்று தான் முதலிடத்தில் உள்ளது என்ற போது இன்று முதல் கார்களின் விலை உயர்வு…!!!


கடந்தாண்டை விட நடப்பாண்டில் 43 சதவீதம் கார்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக அளவில் மாருதி சுசுகி இன் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதில் முதல் ஐந்து இடங்களில் மாருதி சுசுகி கார்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாருதி சுசுகி கார்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்கள் விலையையும் இன்று முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

மாடல்கள் 0.9% முதல் 1.9 சதவீதம் வரை மாருதி கார்களின் விலை உயர்த்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இரும்பு உள்ளிட்ட இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்படுவதாக மாருதி சுசுகி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்றைய தினம் தான் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது கார் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog