ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!


ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!


நம்மில் சிலர் சொந்தமாக வீடுகளை கொண்டிருந்தாலும், பலர் இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழலில் தான் இருக்கிறோம். இயந்திரம் போல உழைத்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு என்பதே.

ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவு செய்து செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் தங்களது லட்சிய கனவான சொந்த வீட்டை அடைக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வீட்டை வாங்கிய அல்லது கட்டிய பின்னர் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த முதலீட்டை (வீட்டை) பாதுகாக்க பலர் மறந்துவிடுகிறார்கள். சொந்தமாக வீட்டை வாங்கி விட்டால் மட்டும் போதுமா.! அதற்கு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டாமா..

ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாகவும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்கு ஏற்பட்டும் சேதத்தை ஈடு செய்யும்.

அதே போல ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கூடுதல் பிரீமியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள ஃபர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களையும் சேர்க்கலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல வாடகை குடியிருப்பில் உள்ள உங்களின் தனிப்பட்ட உடமைகளைப் பாதுகாக்க உதவும் சொத்து காப்பீட்டு கொள்கையாகவும் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது. எனவே தான் உங்கள் வீட்டின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் காப்பீட்டை பெறுவது இருக்கிறது.

ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் தேவை குறித்து இன்னும் உங்களுக்கு இன்னும் குழப்பம் நீடித்தால் தொடர்ந்து படியுங்கள்..

Read More : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!


ஏன் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்.?

இந்தியாவில் சுமார் 2,44,119 கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் குடியிருப்பு வளாகங்களில் நடந்துள்ளன. அதே போல கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திருடப்பட்ட சொத்து இழப்பு சுமார் 45% அதிகரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் நடக்கும் சுமார் 70% திருட்டுகள் வீடுகளில் நடப்பவை தான். ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் முன், உங்கள் வீடு அல்லது உடமைகளில் முன்பே இருக்கும் சேதங்கள், கட்டமைப்பு மற்றும் உற்பத்தி குறைபாடுகள் உள்ளிட்டவற்றை பாலிசி கவர் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டினுள் இருக்கும் உங்கள் பொருட்களுக்கு மட்டுமே பாலிசி எடுக்க முடியும்.

ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள முன்னணி வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பல ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இவை வாடிக்கையாளர்கள் வீட்டுக் காப்பீட்டின் அவசியத்தைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான பாலிசியை தேர்வு செய்யவும் உதவுகின்றன.

Comments

Popular posts from this blog