விஜயின் 65 வது திரைப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயர் வைக்க என்ன காரணம்.. பேட்டியில் உலறிய பூஜா ஹெக்டே.


விஜயின் 65 வது திரைப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயர் வைக்க என்ன காரணம்.. பேட்டியில் உலறிய பூஜா ஹெக்டே.


தளபதி விஜய் வெற்றிகரமாக தனது 65 வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் இளம் இயக்குனர் நெல்சன் எடுத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

பீஸ்ட் படம் தமிழை தாண்டி தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளிவர உள்ளதால் விஜயின் மார்க்கெட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வெறு பிசினஸில் நல்ல வேட்டை நடத்தியது. மேலும் முன்பதிவில் கூட நல்ல வரவேற்பு பீஸ்ட் படத்துக்கு கிடைத்துள்ளது.

படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசி வருகின்றனர். குறிப்பாக நெல்சன் இந்த படம் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். அவர் சொல்லும் செய்திகள் அனைத்துமே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் தெலுங்கு ஆடியன்ஸுக்கு ஒரு பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. இதில் பீஸ்ட் பட பிரபலங்கள் அனிருத், இயக்குனர் நெல்சன், நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டனர் ஆனால் நடிகர்கள் விஜய் கலந்து கொள்ளவில்லை. பிரஸ்மீட்டில்  வீடியோ சேனலுக்கு பூஜா ஹெக்டே பேட்டி கொடுத்தார்.

அப்போது அவரிடம் பீஸ்ட் என பெயர் வைக்க என்ன காரணம் என கேட்டனர் அதற்கு அவர் பதில் அளித்தது அவர் அமைதியாக இருப்பார் திடீரென அவருக்கு உள்ளே இருக்கும் பீஸ்ட் வெளியில் வரும்.  பத்து செகண்டுக்கு முன்பு அவர் இப்படி இல்லையே என எல்லோருக்கும் தோன்றும் அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்து அசத்தியுள்ளார். அதனால் தான் பீஸ்ட் என பெயர் வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Chicken Enchilada Skillet

Cherry Almond Biscotti