மறைந்த தனது ரசிகரின் குடுபத்திற்கு நடிகர் ரஜினி கொடுத்த வாக்குறுதி !


மறைந்த தனது ரசிகரின் குடுபத்திற்கு நடிகர் ரஜினி கொடுத்த வாக்குறுதி !


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனிடையே சமீபத்தில் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான முத்து மணி மரணமடைந்தார், அவர் ரஜினிக்காக முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலமின்மை காரணமாக மரணமடைந்த முத்துமணியின் மறைவு ரஜினி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.  

இதனிடையே முத்துமணியின் மனைவியிடம் நடிகர் ரஜினி போனில் பேசியதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி ரஜினி அவர் மனைவியிடம் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் மகளின் படிப்பிற்கான செலவை தானே ஏற்பதாக கூறியுள்ளாராம். மேலும் ரஜினியின் உடல்நலம் முழுமையாக நலம் பெற்றதும் முத்துமணியின் குடும்பத்தை நேரில் சென்று சந்திப்பதாகவும் கூறினாராம். ரஜினியின் இந்த செயலை அவரின் ரசிகர்கள் பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531