டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!


டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!


டெல்லியில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளது. 

இதற்கான அழைப்பிதழ்களை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு நள்ளிரவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஏராளமான திமுகவினர் திரண்டு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Stalin

இன்று காலை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு திடீரென வந்த சோனியா காந்தி முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். 

மேலும் படிக்க | MK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்

Sonia

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் வழங்கினார். 

பிரதமருடனான சந்திப்பில், கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி, ஜி.எஸ்.டி நிலுவை தொகை மற்றும் தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதி போன்றவற்றை உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 

Modi

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Comments

Popular posts from this blog

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Paper Bag Sea Otter Craft for Kids with Free Printable Template

இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது! விஜயகாந்த் எச்சரிக்கை!