தோனியின் முடிவால் உடைந்து போனேன் - சிஎஸ்கே வீரரின் ஆதங்கம்


தோனியின் முடிவால் உடைந்து போனேன் - சிஎஸ்கே வீரரின் ஆதங்கம்


தோனி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த சிஎஸ்கே அணியில் முதல் முறையாக ஆட ஒப்பந்திக்கப்பட்டார் நியூசிலாந்தின் இடது கை தொடக்க வீரர் டெவன் கான்வே. இவரை சிஎஸ்கேவுக்கு ஆடும் இன்னொரு மைக் ஹஸ்ஸி என்றே பலரும் வர்ணிக்கின்றனர், ஆனால் அவர் முதல் போட்டியில் அன்று சொதப்பினார்.

இன்று லக்னோவுக்கு எதிராக ஒரு காட்டு காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். இவர் தோனியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர நேரில் பார்த்ததில்லை, நேரடியாக அனுபவித்ததும் இல்லை, எனவே தோனியின் கேப்டன்சியில் ஆடப்போகிறோம் என்று ஆவலாகவே இருந்தார் டெவன் கான்வே.

தோனி கேப்டன்சியின் கீழ் விளையாடுவது என்பது தன்னுடைய கனவு எனத் தெரிவித்துள்ள அவர், அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் தோனி எடுத்த முடிவு தன்னுடைய இதயத்தை நொறுக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு ஆடும் யாரும் தோனியை புகழ வேண்டும் என்ற எழுதாத விதிக்கேற்ப டெவன் கான்வேயும் கூறுவதை வீடியோவில் காணலாம்:

ஐபிஎல் 2022-ன் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். கிட்டதட்ட 28 இன்னிங்ஸ் மற்றும் 3 சீசன்களுக்கு பிறகு அடித்த முதல் அரை சதம். இறுதிவரை களத்தில் இருந்த அவர் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக வயதில் அரைசதம் கண்ட வீரர் ஆனார். இதிலிருந்தே ஐபிஎல் கிரிக்கெட்டின் தரநிலைகள் பற்றி அறியலாம் என்று சீரியஸ் கிரிக்கெட் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog