150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இஸ்ரோ பயிற்சி!


150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இஸ்ரோ பயிற்சி!


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பெங்களூருவில் அமைந்துள்ளது. தற்போது இஸ்ரோ, இளம் விஞ்ஞானிகளுக்கு புது வாய்ப்புக்களை வழங்கும் வகையில்  யுவ விஞ்ஞானி கார்யக்கிரம் திட்டத்தை தொடங்கியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்கள் குறித்த ஞானத்தை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டம். 

 

இது குறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளைஞர்கள் தான் நமது நாட்டின் எதிர்காலம். அவர்கள் மத்தியில் அறிவியல், தொழில்நுட்பத்தில் நவீன விஷயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  இளம் விஞ்ஞானி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள  10ம் வகுப்பு படிக்கும் 150 மாணவர்கள்  தேர்வு செய்யப்படுவர். இத்திட்டம் மே 16 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும். இந்நிகழ்வு நடைபெறும் நாட்களில் உரைகள், பிரபல அறிவியல் விஞ்ஞானிகளின் அனுபவங்கள், சோதனை செயல் விளக்கங்கள், ஆய்வகங்களை நேரில் பார்க்க செய்தல், நிபுணர்களுடன் கலந்துரையாடல், செய்முறை மற்றும் நிகழ்வால் மாணவர்கள் அடையும் பயன்கள் குறித்த தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

8 ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 3 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி அப்ளிகேஷன் மையம், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையம், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி அப்ளிகேஷன் மையம் ஆகிய 5 இஸ்ரோ மையங்களில் இத்திட்ட நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog