ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!


ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!


நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரை அவதாரம் எடுத்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் இதுவரை டைட்டில் வின்னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் 6ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸைத் தொடர்ந்து ஓடிடியில் மட்டும் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியையும்  கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் அதன் நடுவே கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கமல் அதைத் தொடர முடியவில்லை.

மேலும் படிக்க | கேன்ஸ் பட விழா: சூட்கேஸைத் தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே- என்ன நடந்தது?

இதையடுத்து நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  கமலைப் பொறுத்தவரை பல படங்களில் தற்போது பிசியாக உள்ளார். மற்றொரு புறம் அரசியலிலும் தீவிரம் காட்டிவருகிறார். இதனால் பிக்பாஸ் 6ஆவது சீசனை அவர் தொகுத்து வழங்குவரா எனும் கேள்வி எழுந்துள்ளது. 

அவர் கலந்துகொள்ளாத பட்சத்தில் இதனையும் சிம்புவே தொகுத்து வழங்குவாரா அல்லது இருவரையும் தாண்டி வேறு யாரேனும் வரவுள்ளார்களா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

மேலும் படிக்க | விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடல் புகழ் பாடகி சங்கீதா காலமானார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Comments

Popular posts from this blog

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Paper Bag Sea Otter Craft for Kids with Free Printable Template

இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது! விஜயகாந்த் எச்சரிக்கை!