இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. ஆனாலும் வளிமண்டல சுழற்சியால் பரவலாக  மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 

 இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட  14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மார்ச் 13ம் தேதி நாளை தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம் 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், புறநகர் மற்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்