13 மணி நேர மின்வெட்டு


13 மணி நேர மின்வெட்டு


நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(31) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

⭕ P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

⭕ T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மாலை 4 மணி முதல் 6 மாலை மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்