வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ... வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்வு!! இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த வட்டி விகித உயர்வை அடுத்து குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்த்தியது. ரிச்ர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் இந்த வட்டி விகித உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் வட்டி விகித உயர்வு இதுவே ஆகும். இதற்கு முன் டிசம்பர் 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 35 பிபிஎஸ் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக பணவீக்க விகிதம் சரிவடைந்த நிலையிலும் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வழிகள் இல்லை. ஏனெனில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவதாலும் வட்டி விகித உயர்வு தொடர்கிறது என சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நிலையற்ற உலகளாவிய வளர்ச்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் கூறினார். இருப்பினும், பலவீனமான உலகளாவிய தேவை மற்றும் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவ...