வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.!


வெற்றி கனியை ருசிக்கபோகும் அனிருத்.! அதுவும் இரண்டு பிரமாண்ட வெற்றி.!


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அணிருத். அதன் பின்னர் எதிர்நீச்சல்,டேவிட், கத்தி, காக்கி சட்டை, மாறி போன்ற பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

அனிருத் இசையில் தற்போது வெளியான மூன்று திரைப்படங்களின் பாடல்கள் ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியை தட்டிப் படித்துள்ளார் இன்னும் அவரது இசையில் உருவான இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும்  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’  சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ இந்த மூன்று திரைப்படங்களிலும் அனிருத் இசையமைத்துள்ளார் இந்த மூன்று படத்தில் உள்ள பாட்டு தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.

anirudh
anirudh

அதிலும் பிஸ்ட்  திரைப்படத்தில் ‘அரபிக்குத்து’  என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் ஹிட்டானது. மேலும் இவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’  திரைப்படத்திலும் இசை அமைத்துள்ளார் அந்த திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். அந்த திரைபடத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

IPL 2022: யாரும் அவர் பவுலிங்கை தொட முடியாது, இந்தியாவுக்கு ஆடப்போறாரு- கவாஸ்கர் பாராட்டும் பவுலர்

Paper Bag Sea Otter Craft for Kids with Free Printable Template

இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது! விஜயகாந்த் எச்சரிக்கை!