‘டாணாக்காரன்’ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது


‘டாணாக்காரன்’ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது


இதையும் படிங்க

ஆசிரியர்

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது.

இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது.

தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து முடித்திருக்கிறார்.

டாணாக்காரன் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி இருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள்.

போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

டாணாக்காரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

Comments

Popular posts from this blog

Hand Model of the Brain

பள்ளி துப்பாக்கி சுடும் வீரர்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை உள்ளூர் நிறுவனம் உருவாக்குகிறது1216594531

ஆட்டோக்குள் சில்மிஷம்.... ஓட்டுநரை துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்